Tuesday, 17 February 2015

அன்பு நண்பர் குமரகுருபரன் மற்றும் அவர் தம் சகாக்களுக்கு..,

..த்தா நா உன்ன இந்த தொகுப்பை போட சொல்லி கேட்டனாடா..? - என்று எழ வாய்ப்பிருக்கும் கேள்வியின் அடிப்படையில் சிலவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஞானம் நுரைக்கும் போத்தல் என்னும் கவிதை தொகுப்பு முழுக்க எனது விருப்பத்தின் பேரில் திரு. குமரகுருபரன் அவர்களின் அனுமதியோடு (01/03/2014. நள்ளிரவு 12.42 மணிக்கு )  எவ்வித அரசியல் மற்றும் விளம்பர எதிர்பார்ப்பின்றி ஒரு எளிய வாசகனின் மனநிலையில் ஆத்மார்த்தமாக சக நண்பன் ஒருவனுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. நன்றி குமரகுருபரன்.

குமரகுருபரன் அவர்களை நேரில் சந்தித்ததும் அலைபேசியில் முதன் முறை பேசியதும் புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்று தான். (08/08/2014). இடைப்பட்ட காலத்தில் எங்களிருவருக்கும் மீடியேட்டராக இருந்த சில நண்பர்களுக்கும் முகநூல் செய்தி பெட்டிக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். 


உப்பு சப்பில்லாத விவாதத்திற்க்காக மூன்றாண்டுகளுக்கு முன்பே தோழர் லெஷ்மி சரவணக்குமார் என்னை நட்பு நீக்கம் செய்து விட்டார். இசையின் கவிதையின் பால் கொண்ட ஈர்ப்பின் அடிப்படையில் இசைக்கும் எனக்குமான நட்புறவு இருந்தது.

லெஷ்மி மற்றும் இசை சம்பந்தமான பிரச்சனையின் போது ( நண்பர்கள் மன்னிக்க... மீண்டும் மீண்டும் இது குறித்து எழுத எனக்கே அயற்சியாக உள்ளது. ஆனாலும் உங்களை விடப் போவதில்லை.)
தோழர் மனோ.மோகனின் பதிவு ஒன்றின் அடிப்படையில் தோழர் லெஷ்மி அவர்களின் பிரபலங்கள் என்னும் வெகுமானம் என்ற தலைப்பிலான பதிவு ஒன்றை காண நேர்ந்தது.

அதிகமான விருப்பக்குறிகளாலும் கருத்திடலாலும் அப்பதிவு நட்புநீக்கம் செய்யப்பட்ட எனக்கு காணக் கிடைத்தது எனக் கருதுகிறேன். ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதப் பட்ட தலைப்பிலிருந்து யுவ புரஸ்கார் அபிலாஷ் இந்தியா டுடே துவங்கி ஏழை பிச்சைக்கார எழுத்தாளன் என்று தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்ளும் கடைசி பத்தி வரை லெஷ்மியின் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் தனித்த அரசியல் கலந்து எழுதப்பட்டதாகவே எனக்கு தோன்றியது.

நட்பின் அடிப்படையிலேயே நிகழ்ந்த நிகழ்வென்று தோழர் இசை அலைபேசி உரையாடலின் வழியே தெரிவித்த பின்பும்
28/01/2014 ஜனவரி நள்ளிரவு எனக்கும் குமரகுருபரனுக்கும் நிகழ்ந்த கடைசி உரையாடல் வரையிலும் அதற்குப் பின்னும் இசை லெஷ்மியை அடித்தது தவறென்றே குறிப்பிட்டு வருகிறேன்.
நடந்த நிகழ்வின் கண பரிமாணங்களை உள்வாங்கியவன் என்ற அடிப்படையிலும் லெஷ்மியை கை பிடித்து மது விடுதிக்குள் அழைத்து சென்றவன் என்ற முறையிலும் மனோ மோகன் பதிவு செய்திருந்த பதிவின் அடிப்படையில் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே முன் வைத்தேன். 

மேற்குறிப்பிட்ட பதிவில் சாதி என்ற சொல் \\ சாதித் திமிர். உள்ளே சாதி இல்லாமல் இது வெளியே வராது// என்பதில் அந்நிகழ்வில் சாதி எங்கிருந்து வந்தது. உடனிருந்தவர் என்ற முறையில் இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டுமென்று பதிவிட்டிருந்தேன்.

நிற்க..,
இன்று வரை சாதி குறித்து நான் கேட்ட கேள்வி இது மட்டுமே. இக்கணம் வரை இசை எந்த சாதி என்பது எனக்கு தெரியாது. லெஷ்மி எந்த சாதி என்பது எனக்கு தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை.

நான் அடையாளங்களை துறக்க முயற்சி செய்பவன். சாதிய அமைப்பிற்கு முற்றிலும் எதிராக செயல்பட விரும்புபவன்.

சாதி குறித்த அடையாளங்களை எதன் அடிப்படையில் நீங்கள் பயன்படுத்தினீர்கள்..? என்ற கேள்வியை திரு மனோ மோகன் அவர்களிடம் முன் வைத்தேன். வெகு நாட்களாக பதிலில்லை. மீண்டுமொருமுறை கேள்வி எழுப்பினேன். இம்முறை லெஷ்மி சரவணக் குமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக வால்பாறையில் இசை நடந்து கொண்ட நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பினார். இது எப்படி நான் கேட்ட கேள்விக்கு பதிலாகும் என்று சர்வ நிச்சயமாக எனக்கு புரியவில்லை. இருந்தும் அப்பதிவில் இசை கலந்து கொண்டு அவர்தம் விளக்கங்களை முன் வைத்ததன் அடிப்படையில் கேள்வி எழுப்பாமல் விலகிச் சென்றேன். (29/01/2014) 


துடி பாணன் என்ற முகமற்றவர்(?) எழுப்பிய கேள்விகளின் அடிப்படையிலேயே இவ்விளக்கத்தை நான் அளிக்க நேர்கிறது. நன்றி துடி பாணன்.




எந்த முகாந்திரமும் இல்லாமல் சாதி என்ற சொல்லை எப்படி அத்தனை எளிதாக உங்களால் பயன்படுத்த முடிகிறது..? சாதாரண கரித்துண்டால் வெற்று சுவற்றில் எழுதப்பட்ட சாதியம் குறித்த சொல் எத்தனை பெரிய கலவரங்களை உருவாக்குகிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறியாததா..? வெகு நாட்களுக்கு பின் பின்னொரு பதிவில் தோழர் மனோ.மோகன் அவ்விடத்தில் எந்தவொரு சாதி குறித்த உணர்வையும்
தான்
உணர வில்லை என்று சான்றிதல் வழ்ங்குகிறார்.

குறிப்பிட்ட பதிவில் விருப்பக்குறி மற்றும் கருத்திடல் இட்ட அத்தனை பேரையும் அத்தனை நாள் கழித்து முட்டாளாக்குகிறார் தோழர் மனோ.மோகன்.. இதை தான் நீங்கள் இலக்கியம் என்று கூறுகிறீர்களா..? இதற்கு தான் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்களா..? அடித்தான் அடி
த்தான் என்று கூப்பாடு போடுகிறீர்களே... அப்பட்டமாக வெளிப்பட்ட இந்த கயமைத்தனத்தை ஒருவன் கூட கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா..?
அதற்கு முதல் நாள் 28/01/2014 நள்ளிரவு என்னை அலைபேசியில் அழைத்த குமரகுருபரன் எல்லோரும் லெஷ்மியை சார்ந்து பேசும் பொழுது நீ மட்டும் எதற்காக சாதி குறித்து கேள்வி எழுப்புகிறாய்..? என்று கேட்டார். குமரகுருபரன் அன்று என்னிடம் பேசியது அதிகாரத்தின் உச்சம். அன்று அவர் பேசிய அனைத்து வார்த்தைகளும் என்னை கடுமையாக காயப்படுத்தின. லெஷ்மியிடமோ கார்க்கியிடமோ என்னை மன்னிப்பு கேட்குமாறு கடும் சொற்களால் வற்புறுத்தினார். கிட்ட தட்ட ஒரு மணி நேரத்திற்க்கு குறைவில்லாமல் பேசிய அத்தனை சொற்களும் பதிவு செய்ய முடியாதவை. அலைபேசியை துண்டித்தே விவாதம் முற்று பெற்றது.

மறுநாள் காலையில் ஞானம் நுரைக்கும் போத்தல் தொகுப்பின் மீதான அத்தனை எழுத்தாள உரிமைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார்.


நன்றி. திரு.குமரகுருபரன். இக்கணத்தில் உங்களின் அறிவிப்பை நான் முழு மனத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.

இத்தொகுப்பை பொருத்தவரை ஆகஸ்ட் 2014 மாதத்திற்கு முந்தைய பதிவுகளுக்கும் இன்று வரையிலான பதிவுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பயன்படுத்தியுள்ள அநாகரீகமான சொற்களின் எண்ணிகையே நீங்கள் அடைந்திருக்கும் வெற்றி.

கம்பவுண்டர் நாயே என்று எதன் அடிப்படையில் மற்றொருவரை அழைகிறீர்கள் திரு.குமரகுருபரன்...? நீங்கள் டாக்டர் என்ற அதிகாரத்தினாலா...?  நொண்டிப்பயலே
என்று ஒரு மாற்றுத் திறனாளியை   அழைப்பதன் மூலம் உங்கள் தோழிகளுக்கும் சகாக்களுக்கும் நீங்கள் கற்றுக் கொடுப்பது என்ன திரு. குமரகுருபரன்..?

பொது வெளியில் இத்தனை தரம் தாழ்ந்த சொற்களை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் என்னவாக உருவெடுக்க நினைக்கிறீர்கள் குமரகுருபரன்...? இத்தகைய சொற்களை உங்கள் தாய் தந்தை சகோதரி குழந்தை முன் உங்களால் பயன்படுத்த முடியுமென்று நினைக்கிறீர்களா..? அத்தனை எளிதான சொற்கள் தானா அவை..?
உங்களின் மீதான மிகுந்த வருத்ததுடன் இப்பதிவை எழுதுகிறேன் திரு.குமரகுருபரன்.
ஒவ்வொரு முறையும் உங்களை திரு என்ற அடைமொழி இட்டு
அழைத்த பின்னரும் எனக்கு உங்கள் பதிவில் எத்தகைய கீழ்த்தரமான வசையாடல்களும் சொல்லாடல்களும் காத்திருக்கின்றன என்பதை அறிந்தே இதை எழுதுகிறேன். தொடருங்கள் திரு.குமரகுருபரன்.

முகநூல் சாராத நட்புகளுக்கென்று என்னிடம் தனித்த மரியாதை இருக்கிறது என்பதால் மேலும் சில நண்பர்களுக்கு பதிலளிக்காமல் செல்கிறேன்.

நன்றி.திரு.லெஷ்மி சரவணக் குமார்.
நன்றி. திரு. மனோ.மோகன்.
உரையாடுவதற்கு இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன. காத்திருக்கிறேன் தோழமைகளே...

No comments:

Post a Comment